Tuesday, 1 September 2020

தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரின் காணாமல் போன தங்கமூக்குபொடிடப்பாவும்

ஒரு நாள் கிருஷ்ணதேவராயர் மிகவும் கவலையுடன் இருந்தார். எவராலும் அவரிடம் போய் தைரியமாக பேச முடியவில்லை. எல்லா அமைச்சர்களும் தெனாலிராமனிடம் சென்று அவரது உதவியை கேட்டனர்.

 

தெனாலிராமன் அடுத்த நாள் ராஜ சபா கூடிய போது மன்னரிடம் அவரது கவலைக்கான காரணத்தை மெதுவாக கேட்டான்.  கிருஷ்ணதேவராயர் மூக்குபொடி அடிக்கடி போடுவது வழக்கம். ஆனால் அன்று ஒரு தடவை கூட மூக்குப்பொடிபோடவில்லை. மிகவும் அசதியாகவும் காணப்பட்டார்.

 

மன்னரும் மிகவும் மனவருத்தமுடனும் எரிச்சலுடனும் தனக்கு உயிரான சிறிய ஆனால் முழுவதும் தங்கத்தினாலான மூக்குபொடி டப்பாவை இரண்டு நாளாக காணவிலை என்று சொன்னார். மேலும் அதனை தேடித் தருபவருக்கு 100 சவரன் தங்கம் பரிசும் அறிவித்தார்.

 

ராஜ சேவகர்கள், மற்றும் அமைச்சர்களும் உடனே அரண்மனை முழுவதிலும் சல்லடை போட்டு தேட ஆரம்பித்தனர். ராஜ சேவகர்கள், மற்றும் அமைச்சர்களும் உடனே அரண்மனை முழுவதிலும் சல்லடை போட்டு மன்னரின் சிறிய தங்க மூக்குப்பொடி டப்பாவை தேட ஆரம்பித்தனர்.

 

பல நாட்கள் தேடியும் எவராலும் மூக்குப்பொடி டப்பாவை கண்டுபிடிக்க முடியவில்லை.  முக்கிய அமைச்சரும் சேனாபதியும் எப்போதும் தெனாலிராமனை சங்கடத்தில் ஆழ்த்தி அவனை மன்னரின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாக்குவதே வழக்கம். ஒவ்வொரு முறையும் தெனாலிராமன் தன் புத்தி கூர்மையினாலும் சாதுரியத்தாலும் மன்னரின் அன்பையும் மரியாதையும் பெற்று வந்தான்.

 

இந்த முறை...முக்கிய அமைச்சரும் சேனாபதியும் தெனாலிராமனை பார்த்து   

 

“இன்று மாலை உன்வேலை போய்விடும். நீ சிறையில் அடைக்கப்படுவாய்” என்று ஏளனம் செய்தனர்.  தெனாலிராமன் காளியை வேண்ட கோவிலுக்கு சென்றுவிட்டான்.

 

மாலை ராஜ சபை கூடியது. மன்னரும் தன் பேத்தியுடன் வந்துவிட்டார்.  சபை முடிந்தபிறகு தன் பேத்தியுடன் ராஜதோட்டத்தில் விளையாட செல்லவேண்டுமே!

 

மன்னர் “ என்ன ஆயிற்று? கிடைத்ததா? அமைச்சரே! சேனாதிபதி! “ இருவரும் பதில் பேசவில்லை!

 

மன்னர்: “ராமா! என்ன ஆயிற்று? கிடைத்ததா?

 

தெனாலிராமன்,” மன்னா! உங்கள் வினாவிற்கு பதில் அளிக்குமுன் இந்த மர யானை பொம்மையை உங்கள் பேத்தியிடம் தங்கள் கையினால் கொடுக்க வேண்டுகிறேன்”

 

“சரி சரி! இங்கே கொடு! நேரத்தை வீணடிக்காதே!”

 

மன்னர் தெனாலிராமனிடம் இருந்து மர யானையை வாங்கி அதன் வேலைப்பாடு பார்த்து சிறிது நேரம் வியந்தார்.  அதற்குள், மன்னரின் அருமைபேத்தி அந்த மரயானையை பார்த்து “ குட்டி யானை! குண்டு யானை! கருப்புயானை! “ என்று அதனுடன் விளையாட ஆரம்பித்தாள்.

 

மன்னர் திரும்பவும் : “ராமா! என்ன ஆயிற்று? கிடைத்ததா? “

 

தெனாலிராமன் – மன்னா! தங்கள் அந்தப்புரத்திற்கு செல்வோமா?

 

என்ன தைரியம் உனக்கு! என்ன சொல்லவிரும்புகிறாய்? நான் என்னிடமே வைத்துக்கொண்டு பொய் பேசுகிறேன் என்று மறைமுகமாக குற்றம் சாற்றுகிறாயா? “

 

இல்லை இல்லை அபச்சாரம் – எல்லோரும் எல்லா இடங்களிலும் தேடினர் என்று முக்கிய அமைச்சரும் சேனாபதியும் சாதிகாகின்றனரே! எனக்கு ஒரு சந்தேகம். அதனால் உங்கள் கண் முன்னால் ஒரு இடத்தை சோதிக்க விரும்பினேன்.  நான் உங்கள் தண்டனையை மகிழ்சியுடன் ஏற்றுக்கொள்வேன். அதேபோல அமைச்சரும் சேனாபதியும் அவர்களது கவனக்குறைவை நிரூபித்தால் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாரா என்று கேளுங்கள் மன்னா!” – தெனாலிராமன் மன்னர் முன் மண்டியிட்டான்.

 

அமைச்சரும் சேனாபதியும் “ அப்படியே நிரூபித்தால் நாங்கள் தண்டனைக்கு தயார்” என்று ஒருமித்த குரலில் சவால் விட்டனர்.

 

மன்னருக்கு என்ன செய்வது என்று குழப்பம்.

 

ஆனாலும் தெனாலிராமன் மீது உள்ள உண்மையான அன்பால்- “சரி இதுதான் கனடசி அவகாசம் இதில் தோல்வி அடைந்தால் சிறைத்தண்டனைதான்”.

தெனாலிராமனோ – உங்கள் மூக்குப் பொடி கிடைத்துவிட்டால்?”

 

மன்னர்-“ நான் 1000 தங்க நாணய பொற்கிழி உனக்கு தருவேன் என்று உறுதிகொடுத்தார்.

 

கடைசி பகுதி தொடரும். மூக்குப்பொடி போடாமல் மூளை வேலை செய்ய மறுத்தது. கோவமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருந்தது.

 

மீண்டும் அமைச்சர்கள் தெனாலிராமன் வீட்டிற்கு சென்று அவனிடம் உதவி கேட்டனர். ஏதாவது வழி சொல்லுங்கள்,

 

“எங்கே போயிருக்கும்? யாராவது திருடிவிட்டார்களா? இருக்கமுடியாதே! மன்னர் தனக்கு பிரியமான பொடி டப்பாவை தன் ஜோபியின் உட்பக்க பையில் தானே எப்போதும் வைத்திருப்பார்?” என்று கேட்டான் தெனாலிராமன்.

 

மன்னரின் மனத்தை மாற்ற முயற்சி செய்யவேண்டும் என்று தெனாலிராமன் மன்னரை நாடினான். மன்னரோ மனக்கவலையுடனும் வேதனையுடனும் இருந்தார்.  தெனாலிராமன் மெதுவாக ‘மாண்புகு மன்னா! இந்த கவலை உங்கள் உடம்பு ஆரோக்கியத்தை குலைக்குறது. தாங்கள் வேறு டப்பாவை எடுத்துக்கொள்ளுங்களேன் என்றான்.

 

மன்னரோ “தெனாலிராமா! நீ தலையிடாதே! முடிந்தால் என் தங்க பொடி டப்பாவை தேடி கண்டுபிடித்துக்கொடு! என் நேரத்தை வீணாக்காதே என் கோபத்திற்கும் ஆளாகாதே! என்றார். தெனாலிராமன் மேலும் தொடர்ந்தான்

 

“அப்படி என்ன விசேஷம் அந்த டப்பாவில்?” - என்று கேட்டான். மன்னரோ

“உன் மரமண்டைக்கு புரியாது. உனக்குஎப்போதாவது மூக்குப்பொடி போட்டு பழக்கம் உண்டா? அந்த பொடி டப்பாவை எடுத்து மெதுவாக தடவிக்கொடுத்து, பிறகு அதன் மூடியின் மேல் இரண்டு விரல்களால் ஆள்காட்டி விரல் மேலும் நடுவிரல் இரண்டு மூன்று முறை தட்டிக்கொடுத்து, பிறகு கண்களை மூடிக்கொண்டு, மூடிய பெட்டியை மூக்கில் அருகில் கொண்டு சென்று, அந்த தரமான மூக்கு பொடி கமகம வாசனையை நுகர்ந்து பிறகு கண்மூடியபடியே பெட்டியை திறந்து.....

 

மன்னர் சிறிது நேரம் கண்மூடியிருந்தார்.... அவர் கண்களிலிருந்து  பொல பொல என கண்ணீர் பொங்கி வழிந்தது.

 

தெனாலிராமன் மன்னர் கண்ணீர் மல்கி பார்த்த்தே இல்லை. இப்போது என்ன செய்வது? “மன்னா வேறு பெட்டி.........”

 

“நீ என் முன் நிற்காதே போய் என் தங்க பொடி டப்பாவை தேடிக் கொண்டு வா” என்று உத்தரவிட்டார் கிருஷ்ணதேவராயர்.........

 

தெனாலிராமன் மிக கடுமையாக யோசிக்க ஆரம்.பித்தான். “முதலில் மன்னர் மனத்தை திசை திருப்பவேண்டும்.”  “நமக்கு சில நாட்களும் தேடுவதற்கு தேவை.”  ஒரு நல்ல உபாயம் தோன்றியது. தலைநகரில் கோலாகலமான கலை மற்றும் கேளிக்கை, வாணவேடிக்கை என ஏற்பாடு செய்யலாம். அதில் சாம்ராஜ்யத்தில் உள்ள சிறந்த கலைஞர்களையெய்ல்லாம் வரவழைத்து அவர்களை தங்கள் திறமைகளயும் கைவேலைப்பாடு திறன்களையும் மன்னர் முன் காண்பிக்க வைக்கலாம்.  இந்த நிகழ்ச்சிகள் இரண்டு மூன்று நாட்கள் நடைபெற்றால் நமக்கு  பொடி டப்பாவை தேட போதிய அவகாசம் கிடைக்கும் என்று முடிவு செய்தான் தெனாலிராமன்.

 

அதன்படி முக்கிய அமைச்சரின் உதவியுடன் மன்னரின் அனுமதி பெற்றான். அவன் நல்லகாலம் மன்னரின் மூன்று வயது பேத்தியின் பிறந்த தினம் அந்த மாதமே வந்தது. உடனே எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றன. மன்னரும் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதில் தன் கவனத்தை திருப்பினார். ஆனாலும் அவரால் மூக்குப் பொடி டப்பாவை மறக்க முடியவில்லை.............

 

கலைநிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் நாளும் வந்தது. கண்காட்சி மண்டபம் மற்றும் அதை ஒட்டிய மைதானத்திலும் எல்லாவிதமான ஆட்டங்கள், பாடல்கள், விளையாட்டுக்கள், தீவிரமாக தொடங்கியது. மன்னரும் தனது பேத்தியுடன் ஒவ்வொன்றாக பார்த்து மகிழ்ந்தார். பேத்தி கூட இருந்ததால் இன்னும் மகிழ்ச்சிதான். மூன்று நாட்கள் வேகமாக கடந்தது..

 

கடைசி நாள்பேத்தியின் பிறந்த தினம். காலையிலிருந்தே மன்னரும் பேத்தியுடன் மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்று சிறப்பு அம்சமாக கைவேலைத்திறன் பெற்ற கலைஞர்கள் மற்றும் திறனாளிகள் தங்கள் படைப்புகளையும் திறமைகளையும் காண்பித்தனர். திரண்டு இருந்த மக்களும்,  அமைச்சர்கள் எல்லோரும் அங்கு இருந்த சிற்பங்கள், பொம்மைகள், சிலைகள் எல்லாவற்றையும் கண்டு விமரிசித்தனர்; சிலர் பொருட்களை தரம் பார்த்தனர்.

 

மன்னரும் தன்னுடைய நுண் அறிவாற்றலால் பல கேள்விகளை கேட்டார் இந்த சிற்பம் செய்ய இந்த கல்லை எந்த மலையிலிருந்து எடுத்தீர்கள்... எவ்வளவு நாட்கள் ஆகியது, யாளை வடித்த இந்த மரம் காட்டு மரமா, சிவப்பு சந்தனமா இப்படி பல வித கேள்விகள் கேடாகப்பட்டன.

 

மன்னரின் பேத்தியோ, குதிரை, பூனை, யானை, குரங்கு, நாய் என்று ஒவ்வொன்றாய் பார்த்து தொட்டு விளையாடி மகிழ்ந்தாள். தெனாலிராமனும் மன்னர் காணாமல் போன பொடி டப்பாவை மறந்து விட்டதை கண்டு மகிழ்ச்சியாக இருந்தான்.

 

அப்போது தெனாலிராமனுக்கு ஒரு பொறி தட்டியது!

 

மூன்றாம் நாள் மாலை எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்து மன்னர் பலருக்கு பரிசுகளும் பொற்கிழிகளும் கொடுத்தார். பிறகு அரண்மனைக்கு புறப்பட்டார். அப்போது மன்னருக்கு காணாமல் போன மூக்குபொடி டப்பா நினைவிற்கு வந்து விட்டது.  உடனே முக்கிய அமைச்சரை கூப்பிட்டு “நாளை காலை ராஜசபையில் ஒரு முக்கிய அறிவிப்பு செய்யபோகிறேன். எல்லோரும் கட்டாயம் சபையில் இருக்கவேண்டும் என்று தண்டோரா போட்டு விடுங்கள்” என்று உத்தரவு போட்டு விட்டார்.

 

மறு நாள் எல்லா அமைச்சர்கள், சேவகர்கள், மற்றும் நாட்டின் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பிரஜாக்கள் வந்து விட்டனர்.

 

 மன்னரும் வந்து விட்டார். மிகவும் எரிச்சலுடனும் கோபத்துடனும் காணப்பட்டார். தெனாலிராமனை மட்டும் காணவில்லை.

 

“தெனலிராமன் எங்கே?” “தேடுங்கள்” என்றார் மன்னர்........

 

மன்னரோ ராஜசபையில் கோபத்துடன் “முக்கிய அமைச்சரே, சேனாபதியே, நகர பிரஜைகளே, இந்த நாட்டில் திருட்டும் அதிகமாகிவிட்டது. திருடனை பிடிக்கவோ, திருடப்பட்ட பொருள்களை கண்டு பிடிக்கும் முயற்சியும் யாரும் தீவிரமாக எடுப்பதும் இல்லை.”

 

நான் உங்கள் இருவரையும் வேலை நீக்கம் செய்யப்போகிறேன்”.

 

“மன்னா! மன்னா! நாங்கள் எல்லா இடத்திலும் சல்லடை போட்டு தேடி விட்டோம். தெனாலிராமனின் உதவியையும் நாடினோம்”.

 

அப்போது தெனாலிராமன் வேகமாக ஓடி ராஜசபைக்குள் நுழைந்தான்.

 

“ராமா! மன்னரின் தங்க பொடி டப்பா கிடைத்துவிட்டதா?” மன்னர் வினவினார்.

 

தெனாலிராமனோ மன்னா! உங்கள் அருமை பேத்தியை கூப்பிடுங்கள்! அந்த அருமை குழந்தைக்கு நான் இந்த லேலைப்பாடு மிகுந்த மர யானையை விளையாட்டு பொருளாக தர ஆசைப்படுகிறேன்!  அதற்காகத்தான்  நான் இதைசெய்த தச்சனின்  வீடுதேடிப்பிடித்து வாங்கிவந்தேன். அதனால் நேரத்தில் ராஜ சபையில் வர கால தாமதம் ஆயிற்றுஎன்று விளக்கம் அளித்தான்.

 

மன்னரோ தெனாலிராமா! உன்னிடமும்தான் பொடி டப்பாவை தேடச்சொன்னேன்.  நீ அதைவிட்டுவிட்டு மர பொம்மையை வாங்க நேரத்தை வீணடிக்கிறாய்

 

உங்கள் மூவருக்கும் கடைசி எச்சசரிக்கை! இண்று மாலை ஐந்து மணிக்குள் என்னுடைய தங்க மூக்குப்பொடி டப்பா தேடித்தரவில்லை என்றால் உங்களுக்கு கடும் தண்டனை கிடைக்கம். மேலும் வேலை நீக்கமும் செய்துவிடுவேன்.”

 

தெனாலிராமனோ மன்னா!....குழந்தை..... யானை....

மன்னரோசபையைவிட்டு சென்றுவிட்டார்..

 

முக்கிய அமைச்சரும் சேனாபதியும் எப்போதும் தெனாலிராமனை சங்கடத்தில் ஆழ்த்தி அவனை மன்னரின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாக்குவதே வழக்கம். ஒவ்வொரு முறையும் தெனாலிராமன் தன் புத்தி கூர்மையினாலும் சாதுரியத்தாலும் மன்னரின் அன்பையும் மரியாதையும் பெற்று வந்தான்.

 

இந்த முறை...முக்கிய அமைச்சரும் சேனாபதியும் தெனாலிராமனை பார்த்து, “ இன்று மாலை உன்வேலை போய்விடும். நீ சிறையில் அடைக்கப்படுவாய் என்று ஏளனம் செய்தனர்.  தெனாலிராமன் காளியை வேண்ட கோவிலுக்கு சென்றுவிட்டான்.

 

மாலை ராஜ சபை கூடியது. மன்னரும் தன் பேத்தியுடன் வந்துவிட்டார். சபை முடிந்தபிறகு தன் பேத்தியுடன் ராஜதோட்டத்தில் விளையாட செல்லவேண்டுமே!

 

மன்னர் என்ன ஆயிற்று? கிடைத்ததா? அமைச்சரே! சேனாதிபதி! “ இருவரும் பதில் பேசவில்லை!

 

மன்னர்: “ராமா! என்ன ஆயிற்று? கிடைத்ததா?

 

தெனாலிராமன்,” மன்னா! உங்கள் வினாவிற்கு பதில் அளிக்குமுன் இந்த மர யானை பொம்மையை உங்கள் பேத்தியிடம் தங்கள் கையினால் கொடுக்க வேண்டுகிறேன்

 

சரி சரி! இங்கே கொடு! நேரத்தை வீணடிக்காதே!”

 

மன்னர் தெனாலிராமனிடம் இருந்து மர யானையை வாங்கி அதன் வேலைப்பாடு பார்த்து சிறிது நேரம் வியந்தார்.  அதற்குள், மன்னரின் அருமைபேத்தி அந்த மரயானையை பார்த்து குட்டி யானை! குண்டு யானை! கருப்புயானை! “ என்று அதனுடன் விளையாட ஆரம்பித்தாள்.

 

மன்னர் திரும்பவும் : “ராமா! என்ன ஆயிற்று? கிடைத்ததா? “

 

தெனாலிராமன் மன்னா! தங்கள் அந்தப்புரத்திற்கு செல்வோமா?

 

என்ன தைரியம் உனக்கு! என்ன சொல்லவிரும்புகிறாய்? நான் என்னிடமே வைத்துக்கொண்டு பொய் பேசுகிறேன் என்று மறைமுகமாக குற்றம் சாற்றுகிறாயா? “

 

இல்லை இல்லை அபச்சாரம் எல்லோரும் எல்லா இடங்களிலும் தேடினர் என்று முக்கிய அமைச்சரும் சேனாபதியும் சாதிகாகின்றனரே! எனக்கு ஒரு சந்தேகம். அதனால் உங்கள் கண் முன்னால் ஒரு இடத்தை சோதிக்க விரும்பினேன்.  நான் உங்கள் தண்டனையை மகிழ்சியுடன் ஏற்றுக்கொள்வேன். அதேபோல அமைச்சரும் சேனாபதியும் அவர்களது கவனக்குறைவை நிரூபித்தால் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாரா என்று கேளுங்கள் மன்னா!” – தெனாலிராமன் மன்னர் முன் மண்டியிட்டான்.

 

அமைச்சரும் சேனாபதியும் அப்படியே நிரூபித்தால் நாங்கள் தண்டனைக்கு தயார்என்று ஒருமித்த குரலில் சவால் விட்டனர்.

 

மன்னருக்கு என்ன செய்வது என்று குழப்பம்.

 

ஆனாலும் தெனாலிராமன் மீது உள்ள உண்மையான அன்பால்- “சரி இதுதான் கனடசி அவகாசம் இதில் தோல்வி அடைந்தால் சிறைத்தண்டனைதான்”.

 

தெனாலிராமனோ உங்கள் மூக்குப் பொடி டப்பா கிடைத்துவிட்டால்?”

 

மன்னர்-“ நான் 1000 தங்க நாணய பொற்கிழி உனக்கு தருவேன் என்று உறுதிகொடுத்தார்.

 

மன்னரும் தன் அந்தபுரத்தை நோக்கி புறப்பட்டார்.. அவர் பின்னால் தெனாலிராமன், அமைச்சர், சேனாதிபதி, மற்ற சேவகர்கள், காவலாளிகள் பின் தொடர்ந்தனர்.

 

மன்னரின் அந்த்தரங்க அரண்மையில் தெனாலிராமன் மன்னரிடம் “தாங்கள் உபயோகிக்கும் பொருட்கள் வைத்திருக்கும் அறைக்கு செல்ல அனுமதி வேண்டும்” என்று கேட்டான். மன்னரும் மிகுந்த குழப்பத்துடனும், சந்தேகத்துடனும் அனுமதி அளித்தார். தெனாலிராமன் ஒரு சேவகனை கூப்பிட்டு அந்த அறையிலிருந்து ஒரு காற்று புகாத மூடி போட்ட ஒரு குறிப்பிட்ட பெட்டியை மேலிருந்து கீழே இறக்க சொன்னான்.

 

மேலும் தொடரும்.

 

தெனலிராமன் அந்த பெட்டியை திறந்து பொடிக்குள் கைவிட்டு தேடினான். அவன் கையில் ஏதோ அகப்பட்டது. அதை வெளியில் எடுத்தான். ....

அந்த காற்று புகாத மூடகொண்ட பெட்டியில் மூன்று மாதத்திற்கு தேவையான  உயர்தர மூக்கு பொடி இருந்தது.

உடனே மன்னர் அதை தன் கையில் வாங்கி பார்த்தால்

......காணாமல் போன தங்க மூக்குபொடி டப்பா!

 

கிருஷ்ணதேவராயருக்கு தலை கால் புரியவில்லை. மூக்குப்பொடி பிரியர்களுக்குத்தான் அவரது சந்தோஷம் புரியும்!

 

தெனாலிராமன் எப்படி கண்டுபிடித்தான்? மன்னர் மறு நாள் காலை ராஜசபையை கூட்ட உத்தரவிட்டார்.

 

மறு நாள் ராஜசபை கூடியது. மன்னரும் தன் தங்க மூக்குப்பொடி டப்பாவை நிறப்பிக்கொண்டு வந்து தனது அரியாசனத்தில் அமர்ந்தார்.

உடனே அந்த பொடி டப்பாவை எடுத்து மெதுவாக தடவிக்கொடுத்து, பிறகு அதன் மூடியின் மேல் இரண்டு விரல்களால் ஆள்காட்டி விரல் மேலும் நடுவிரல் இரண்டு மூன்று முறை தட்டிக்கொடுத்து, பிறகு கண்களை மூடிக்கொண்டு, மூடிய பெட்டியை மூக்கில் அருகில் கொண்டு சென்று, அந்த மூக்கு பொடி கமகம வாசனையை நுகர்ந்து பிறகு கண்மூடியபடியே பெட்டியை திறந்து..... ஒரு சிட்டிகை மூக்குபொடியை எடுத்து இரண்டு மூக்கிலும் நுகர்ந்து  சர் சர் என்று இழுத்தார்.

 

பக்கத்தில் முக்கிய அமைச்சர் “மன்னா! இங்கு ஒரு சிட்டிகை? ... மன்னர் பொடி டப்பாவை அமைச்சரிடம் கொடுத்தார்.  உடனே, சேனாபதி... நல்ல மணமே சொல்லுமே மூக்கு பொடி தரத்தினை ....இங்கேயும் கொஞ்சம் கவனியும் ஓய்.......முக்கிய அமைச்சர் டப்பாவை சேனபதியிடம் தந்தார்....இப்படியே... மூக்குப்பொடி டப்பா ராஜசபையில் ஒவ்வொருவரும் கேட்டு சிட்டிகை பொடி எடுத்கொண்டனர்.

 

மன்னருக்கு கவலை.... “இப்படியே போனால் காலி டப்பாவாவது  திரும்ப வருமா? .....இல்லை டப்பா திரும்ப காணாமல் போய் விடுமா?”

நல்ல வேளை.....மன்னரின் தங்க பொடி டப்பா திரும்ப அவரிடம் வந்து விட்டது.

 

மன்னர் தெனாலிராமனை பார்த்து “தெனாலிராமா! எப்படி கண்டுபிடித்தாய்? சீக்கிரம் சொல்... மண்டை வெடித்துவிடும் போல் இருக்கிறது..”

 

தெனலிராமன்: “உங்கள் அருமை பேத்திதான் காரணம். நீங்கள் யானையின் கலை வளத்தை ரசித்தீர்கள்...ஆனால், உங்கள் பேத்தியோ அந்த மர பொம்மையில் யானை பார்த்து மகிழ்ந்தாள்”

 

அப்போது திருமூலர் திருமந்திரம் ஒன்று நினைவிற்க்கு வந்தது.

 

மரத்தில் மறைந்தது மாமத யானை

மரத்தை மறைத்தது மாமத யானை

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

 

கலை விழாவிலும் கவனித்தேன். இரண்டாவது முறையாக இன்று காலை ராஜ சபையிலும் கவனித்தேன்” “மன்னா! உடனே நினைத்தேன் பெரிய பொடி டப்பாவிற்குள், தங்களின் சிறிய பொடி டப்பா போயிருக்குமோ என்று

 

“பொடி டப்பாவிற்குள் பொடி

பொடிக்குள் பொடி டப்பா”

 

கிருஷ்ணதேவராயர் உடனே தன் அரியசனத்திலிருந்து இறங்கி வந்து

தெனாலிராமனை கட்டி அணைத்துக்கொண்டார். அவர் கண்களில் கண்ணீர் மல்கியது.

No comments:

Post a Comment